சினிமா செய்திகள்

யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிக்க ஆசை: ரேகா!

சென்னை, மே. 6–

‘‘நான் அதிகமாக சம்பளம் வாங்கும் ஆள் இல்லை. தயாரிப்பாளர்களின் கஷ்டம் எனக்கு தெரியும். வெளியில் சொல்வதை நம்பாதீர்கள்’’ என்றார் நடிகர் யோகிபாபு.

‘‘தர்மபிரபு’’ படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா பிரசாத்  ஸ்டூடியோவில் நடந்தது. அதில் நாயகன் யோகிபாபு (எமதர்மன்) பேசுகையில்,

‘‘இப்படத்தில் இரண்டு கதாநாயகர்கள். எமலோகத்தில் நான், பூலோகத்தில் சாம். நானும், முத்துக்குமரனும் 15 வருட நண்பர்கள். நான் ‘லொள்ளு சபா’வில் இருந்து கொண்டு வரும் வருமானத்தில் தான் சாப்பிட்டோம். சில நாட்கள் சாப்பிடாமல் கூட மொட்டை மாடியில் படுத்து உறங்கியிருக்கிறோம். அப்போது பேசிய கதை இப்போது படமாக வந்திருக்கிறது’’ என்றார்.

இப்படத்தைப் பற்றி கூறி, இப்படத்தில் நடிப்பீர்களா? தேதி கிடைக்குமா? என்று முத்துக்குமார் கேட்டதும் ஒப்புக் கொண்டேன். அதே சமயத்தில் ‘குர்கா’ படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டேன். இரு இயக்குநர்களும் நண்பர்கள் என்பதால் 45 நாட்கள் தூங்காமல் இரவு பகலாக நடித்துக் கொடுத்தேன். யாரும் இல்லாத இடத்திற்கு நான் வந்திருக்கிறேன் என்று கூறினார்கள். யாரும் இல்லாத இடத்தில் விளையாட முடியாது. எல்லோரும் இருக்கிறார்கள். அதில் அவரவர் பணியைச் சிறப்பாக செய்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்றார்.

சில இடங்களில் நான் பேசும் வசனங்களைப் பார்த்து படப்பிடிப்பு தளத்தில் பயந்திருக்கிறார்கள். என் வாழ்க்கையில் காலம் கடந்து இப்படம் இருக்கும். ‘ஆண்டவன் கட்டளை‘, ‘பரியேறும் பெருமாள்’ வரிசையில் இப்படமும் அமையும் என்று உறுதிபடக் கூறினார்.

ரேகா பேசும்போது,

இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ராதாரவியுடன் இணைந்து நடித்திருப்பது இதுவே முதல் முறை. யோகிபாபுவிற்கு அம்மா என்றதும் ஒப்புக்கொண்டேன். நானே விரும்பி கேட்ட கதாபாத்திரம் இது. அவருடன் நடித்தால் நகைச்சுவை நன்றாக இருக்கும். எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என்று நம்பினேன் என்றார் ரேகா.

இயக்குநர்கள் முத்துகுமரன், திருமலை, நடன இயக்குநர் விஜி, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், இயக்குநர் செல்வம், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இயக்குநர் மூர்த்தி ஆகியோர் பேசினார்கள்.

அம்மா கிரியேஷன்ஸ் சிவா பேசும்போது, தமிழ் ராக்கர்ஸ், டிக்கெட் விலை ஏற்றம் போன்ற பல பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண்போம். ‘தர்ம பிரபு’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை பார்த்ததும் இப்படத்தை இழந்துவிட்டோம் என்று அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் பொறாமை ஏற்பட்டிருக்கும். யோகிபாபுவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இயக்குநர் முத்துகுமாரின் முகபாவனை நன்றாக இருக்கிறது’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *