செய்திகள்

மோடியின் கன்னியாகுமரி பயண தேதியில் மாற்றம்

டெல்லி, பிப். 12–

பிரதமர் நரேந்திர மோடி, 19-ஆம் தேதி கன்னியாகுமரி வருவதாக இருந்த நிலையில், அந்த பயணத் திட்டம், மார்ச் 1 ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பிப்ரவரி 19-ஆம் தேதி கன்னியாகுமரி வரவிருப்பதாகவும், பணி முடிக்கப்பட்ட சாலை, பாலங்களை திறந்து வைப்பதோடு ,புதிய திடங்களுக்கு அடிக்கல் நாட்ட இருப்பதாகவும், முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து பா.ஜ.க சார்பில் கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்ற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், பிப்ரவரி 19-ஆம் தேதிக்குப் பதிலாக, மார்ச் 1-ந் தேதி கன்னியாகுமரிக்கு , மோடி வரவிருப்பதாகவும் பா.ஜ. கட்சி வட்டாரத் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *