சிறுகதை

மொய்ப்பணம் – ராஜா செல்லமுத்து

திருமணத்திற்கு 20 நாள் இருப்பதற்கு முன்பே நாகராஜ் தன்னுடைய திருமணப் பத்திரிகையை எடுத்துக் கொண்டு உறவினர்கள் நண்பர்கள் தெரிந்தவர்கள் உடன் அலுவலகத்தில் பணிபுரிவர்கள் என்று அத்தனை பேருக்கும் தன் திருமணப் பத்திரிகையை கொடுத்துக் கொண்டே வந்தான்.

ஃபிரண்ட்ஸ் எந்த வேலை இருந்தாலும் கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்து சேருங்க ; நீங்க எல்லாம் வருவீங்க, அப்படின்கிற நம்பிக்கையில் தான் பெரிய மண்டபத்த புடிச்சிருக்காேம். நல்லா சாப்பாடு இருக்குது. வெஜ் நான்வெஜ் ரெண்டுமே இருக்கு. ஏதச் சாப்பிடணும்னு நினைக்கிறீர்களோ அதை சாப்பிடலாம் .வராம மட்டும் இருந்துறாதீங்க ; உங்க வாழ்த்தும் உங்களுடைய வருகையும் எங்களுக்கு ரொம்ப முக்கியம் என்று அத்தனை பேரிடமும் அழைப்பிதழை கொடுத்து விட்டு சொன்னான் நாகராஜ் .

அதுக்கு என்ன நாகராஜ் உன்னுடைய கல்யாணத்துக்கு வராம நாங்க வேற எங்க போக போறோம். நிச்சயமா உன்னுடைய கல்யாணத்தில் கலந்துக்கிருவாேம் என்று அடித்து சொன்னார்கள் நண்பர்கள் .

மிகுந்த மகிழ்ச்சியோடு எல்லா உறவுகளுக்கும் பத்திரிகை கொடுத்துக் கொண்டிருந்தான்.

இன்னும் திருமணத்திற்கு பத்து நாள் ஐந்து நாள் மூன்று நாள் இரண்டு நாள் ஒரு நாள் அன்று குறைந்து கொண்டே வந்தது. எப்படியும் ஆயிரம் பேர் வரைக்கும் பத்திரிகை கொடுத்திருக்கிறோம்; 800 பேராவது வருவார்கள் என்ற நம்பிக்கை வைத்தது நாகராஜ் குடும்பம்.

அதோடு ஒவ்வாெரு பேர்களும் தலைக்கு ஆயிரம் ரூபாய் மொய்ப்பைணம் வைத்தாலும் பெரிய தொகை வரும் என்று கணக்கு போட்டான் நாகராஜ்.

வாங்கிய கடன் இத்தியாதி அனைத்தையும் அடைத்து விடலாம் என்று மனதிற்குள் கணக்கு போட்டான் நாகராஜ் .

விடிந்தால் திருமணம். இரவு திருமண மண்டபம் களை கட்டியது பார்ட்டிகள், பாடல்கள் என்று இளசுகளெல்லாம் சந்தோஷமாக இருந்தார்கள்.

ஆனால் நாகராஜ் மட்டும் வரும் மொய் பணத்தின் அளவு எவ்வளவு? என்று கணக்கு பார்ப்பதிலேயே கவனமாக இருந்தான்.

விடிந்தது திருமணம் ; திருமண மண்டபத்தில் ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். மணமகள் கழுத்தில் தாலியை கட்டினான் நாகராஜ்.

மொய்பணம் கொடுப்பதற்கும் பரிசு பொருட்கள் கொடுப்பதற்கும் நீண்ட வரிசையில் உறவினர்கள் நண்பர்கள் என்று நின்று கொண்டிருந்தார்கள்.

கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் கிப்ட் ஐட்டங்களை கொடுத்து விட்டு பணம் கொடுக்காமல் சென்றார்கள். இது நாகராஜுக்கு ஒரு விதமான எரிச்சலை தந்தது .

என்ன இது பணம் தருவாங்கன்னா எல்லாம் பிளாஸ்டிக் டப்பாவை கொடுத்துட்டு போறாங்க என்று அவனுக்குள்ளே கடிந்து கொண்டான்.

ஒரு சிலர் வீட்டுக்குஉபயோகமான பொருட்களை கொடுத்தார்கள். ஒரு சிலர் பொக்கே என்ற ஒன்றுக்கு உதவாத பிளாஸ்டிக் பூக்களை கொடுத்து விட்டுப் போனார்கள்.

அவன் நினைத்திருந்த மொய்ப் மொய் பணம் நிச்சயமாக வராது என்ற அவனுக்கு தெரிந்தது. கூட அவனுக்கு வருத்தம் கலந்த சோகம் அப்பிக்கொண்டது.

அதை வெளியில் காட்டாமலே சிரித்துக் கொண்டே நின்று கொண்டு இருந்தான் நாகராஜ்.

அவன் தேடித் தேடி பத்திரிக்கை கொடுத்த நண்பர்கள் எல்லாம் அவ்வளவாக மொய் எழுதவில்லை என்பது அவனுக்கு தெரிந்தது.

இதற்கெல்லாம் மேலாக ஒருவர் ஒரு படி மேலே போய் நாகராஜ் கையில் ஒரு பரிசு பொருளை கொடுத்த போது அவனுக்கு தூக்கி வாரிப் போட்டது.

என்ன வெங்கடேஷ் என்ன இது உங்க அணுகு முறை வித்தியாசமா இருக்கே ? என்ன இது என்று மணக்கோலத்தில் இருந்த நாகராஜ் கேட்டான்… இல்ல நாகராஜ் நான் பஸ்ஸிலையோ ஆட்டோலையோ வந்து இருந்தா நிச்சயமா உனக்கு நல்ல மாெய்ப் பணம் கொடுத்திருப்பேன்.

ஆனா இப்ப பாரு கொடுக்க கொண்டு வந்த 1700 ரூபாயை ஓலோ காருக்கு கொடுத்தாச்சு. அதனால நீ என்ன மொய்ப்பணம் நான் கொடுக்கல என்ன தப்பா நினைக்கக் கூடாது.

இந்த ஓலாக்காரன் கொடுத்த பில் 1700 இதனை மொய் பணமா வச்சுக்க என்று வெங்கடேஷ் கொடுத்த போது மணமகள் அருகில் இருந்தாலும் நாகராஜிற்கு மயக்கமே வந்தது .

இப்படி ஒரு ஆளா ? இப்படி ஒரு ஆள் இந்த உலகத்தை நான் சந்தித்தே இல்ல.

செலவழிச்ச பில்ல கொண்டு வந்து மாெய் எழுதுறான் .

ஐயோ கடவுளே என்று தனக்குள் வருந்தி நினைத்துக் கொண்டான் நாகராஜ் .

அப்போது இந்த ஓலோ காரின் பில்லை கொடுத்து விட்டு கீழே இறங்கிய வெங்கடேசனை வெறியோடு பார்த்தான் நாகராஜ் .

அடுத்து மொய்ப்பணம் கொடுக்க நின்றவர்கள் வரிசையில் வெங்கடேஷ் போலவே ஏதோ ஒரு பில்லை கையில் வைத்துக்கொண்டு நாகராஜிடம் ஏதோ சைகையில் பேசிக் கொண்டு வந்தார்.

ஐயையோ இவனும் ஏதாவது ஒரு பில்ல கொடுக்கப் போறானோ? என்ற பயத்தில் மேடையில் நடுங்கியவாறு நின்று கொண்டிருந்தான் நாகராஜ்.

Leave a Reply

Your email address will not be published.