மேட்டூர், ஜன. 9–
மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 2009 கனஅடியாக குறைந்துள்ள நிலையில், நீர்மட்டம் 114.84 அடியாக சரிந்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தாலும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கப்படாத காரணத்தாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது.
114.84 அடியாக சரிவு
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 3017 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை வினாடிக்கு 2009 கன அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்ததால் நேற்று காலை 115.45 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 114.84 அடியாக குறைந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கனஅடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 85.47 டி.எம்.சியாக இருந்தது.