வாழ்வியல்

முகப்பொலிவு ஏற்பட என்ன செய்ய வேண்டும்?

முகப்பொலிவு ஏற்பட வேண்டுமா அதற்கு உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவிவந்தால் தோலின் நிறம் பொலிவு பெறும் என்று நாட்டு மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்..

நாட்டு மருத்துவ நிபுணர்களின் மருத்துவக் குறிப்புகள் வருமாறு:–

குழந்தையை காப்பான் கரிப்பான்

கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.

கடலையும் அடிதடியும்

கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.

மயக்கத்துக்கு ஏலம்

ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

புளியிருக்க புண்ணேது?

புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.

பால்கட்டுக்கு பாசிப்பயிறு

பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

முடிகறுக்க மருதோன்றி

மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச முடி கறுக்கும்.

வாந்தி நீக்கும் நெல்லி

நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.

படர்தாமரைக்கு

அறுகம்புல்லும் மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

பல் ஈறு, வீக்கம், வலிக்கு

கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.

மலச்சிக்கலுக்கு

பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.

மூலம் அகல

ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.

முகப்பொலிவிற்கு

உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *