சினிமா செய்திகள்

மீண்டும் மோதவிருக்கும் ரஜினி, அஜித்?

சென்னை, மே.24–

தீபாவளி அன்று ‘வலிமை’ திரைப்படம் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடித்து வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’. இப்படத்திற்குப் பிறகு, தற்போது நடிகர் அஜித் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தையும் எச்.வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார்.

இப்படத்தின் வெளிநாடுகளில் படமாக்க வேண்டிய சண்டைக் காட்சிகள் மட்டுமே பாக்கியுள்ள நிலையில், பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது. இதனை முடித்து விட்டு, ‘டப்பிங், எடிட்டிங், ரீ ரிக்கார்டிங், கிராபிக்ஸ்’ உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளைப் படக்குழு தொடங்க இருந்தது. ஆகஸ்டு மாதம் இப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் முடிவு செய்து இருந்தனர்.

தற்போது கொரோனா ஊரடங்கால் இந்தப் பணிகளை தொடங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஆகஸ்டு மாதம் ‘வலிமை’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆதலால் ‘வலிமை’ படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது ‘வலிமை’ படமும் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக வரும் தகவலால் இருவரின் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருப்பர்.

முன்னதாக ரஜினியின் ‘பேட்ட’ திரைப்படமும் அஜித்தின் ‘விசுவாசம்’ திரைப்படமும் ஒரே நாளில் அதாவது 2019ஆம் ஆண்டு ஜனவரி 10ந் தேதி அன்று வெளியானது குறிப்பித்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *