செய்திகள் வர்த்தகம்

மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு

சென்னை, ஏப். 2–

தங்கத்தின் விலை இன்றும் சவரனுக்கு ரூ.232 உயர்ந்து, ரூ. 34,136 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர் .

பாதுகாப்பு கருதி, தங்கத்தில் முதலீடு செய்வதால், தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை உயரத் தொடங்கியது. ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 40 ஆயிரத்தைத் தாண்டியது. கொரோனா அச்சுறுத்தலால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வந்த நிலையில், தங்கத்தின் விலை தற்போது ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது.

ரூ. 232 விலை உயர்வு

இந்நிலையில், சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 232 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 4,267 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 34,136 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 232 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 4,626 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 37,008 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை ஒரு கிலோவிற்கு ரூ.300 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 70.00 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ. 70,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *