செய்திகள்

மின்கம்பம் சீரமைப்பு பணியிலிருந்தபோது பலியானவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்

சென்னை, டிச. 28–

மின்கம்பம் சீரமைப்பு பணியிலிருந்தபோது பலியானவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது சம்பந்தமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், எக்கல் கிராமத்தில், ‘‘கஜா’’ புயலால் சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 27.12.2018 அன்று எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் கோயம்புத்தூர் மாவட்டம், திருமலைப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜோக்கப் என்பவரின் மகன் தாவீது ராஜன் என்கிற டேவிட் என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

‘‘கஜா’’ புயலின் தாக்கத்தினால் பாதிப்படைந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, விபத்தில் உயிரிழந்த தாவீது ராஜனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, அவரின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு, சிறப்பினமாக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *