நல்வாழ்வு சிந்தனை
அமெரிக்காவை சேர்ந்த மூத்த மருத்துவர் செளரப் பன்சால், பிபிசியிடம்,”
“கார்டியாக் அரெஸ்டை ( மாரடைப்பு) மரணத்திற்கு முந்தைய கடைசி கட்டம் என்று கூறலாம். இதன் பொருள் என்னவென்றால், இதயம் தன் துடிப்பை நிறுத்தி மரணத்தை கொண்டுவருவது.” என்கிறார்.
மாரடைப்பால் (கார்டியாக் அரெஸ்ட்டால்) ஏற்படும்
மரணங்கள் சோகமான ஒன்று. பொதுவாக கார்டியாக் அரெஸ்ட் வரும் என்று யாரும் நினைத்துக் கூடப் பார்க்க மாட்டார்கள்” என்றார்.
கார்டியாக் அரெஸ்ட் என்ன காரணத்தினால் ஏற்படுகிறது?
என்பதை மருத்துவர் பன்சால் விளக்குகிறார், “இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பொதுவாக பிரதான மாரடைப்பு (ஹார்ட் அட்டாக்) இதற்கு காரணமாக இருக்கலாம்”.
கார்டியாக் அரெஸ்ட்டுக்கு ஏதேனும் அறிகுறிகள் உள்ளதா?
பெரும் பிரச்னை என்னவென்றால், கார்டியாக் அரெஸ்ட் எந்த அறிகுறிகளையும் காட்டாது. திடீரென்று ஒருவருக்கு ஏற்படும் என்பதுதான் உண்மை.
இதயத்தில் மின் செயல்பாடுகள் மோசமடைந்து, இதயம் துடிப்பை நிறுத்தும்.
கார்டியாக் அரெஸ்ட்டுக்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக சில இதயம் சம்பந்தமான நோய்கள், கார்டியாக் அரெஸ்ட் ஏற்படும் சாத்தியத்தை அதிகப்படுத்தும் என்கிறார் அமெரிக்காவை சேர்ந்த மூத்த மருத்துவர் செளரப் பன்சால் .