செய்திகள்

மாசி மகத்தை முன்னிட்டு மதுரையிலிருந்து மார்ச் 3 ந்தேதி நவ ஜோதிர்லிங்க தரிசன சுற்றுலா ரயில்

13 நாள் உணவு, தங்குமிடத்துடன் கட்டணம் ரூ.23,400

மதுரை, ஜன. 22–

மாசி மகத்தை முன்னிட்டு நவ ஜோதிர்லிங்க தரிசன சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாசி மகத்தை முன்னிட்டு நவ ஜோதிர்லிங்க தரிசன சுற்றுலா ரயில் மதுரையிலிருந்து மார்ச் 3 ஆம் தேதி புறப்படுகிறது. இந்த சுற்றுலா ரயில் உஜ்ஜயினி, நர்மதை, சிறீசைலம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்கிறது. இந்த சுற்றுலா தரிசனத்துக்கு, www.ularail.com என்ற இணையதளம் அல்லது 7305858585 என்ற எண் மூலம் பதிவு செய்துக் கொள்ளலாம் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

13 நாள் பயண விவரம்

அதன்படி மதுரையிலிருந்து மார்ச் 3 ஆம் தேதி புறப்பட்டு திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக மார்ச் 5 அன்று உஜ்ஜயினி சென்று மகா காளேஸ்வரர் வழிபாடு நடத்தப்படுகிறது. பின்பு மார்ச் 6 ஆம் தேதி நர்மதை நதியில் நீராடி ஓம்காரேஸ்வரர் தரிசனம், மார்ச் 7 அன்று சோம்நாத் சோமநாத சுவாமி தரிசனம், மார்ச் 9 அன்று நாசிக் திரையம்கேஸ்வரர் வழிபாடு, மார்ச் 10 அன்று பீம் சங்கர் பீம்சங்கர சுவாமி தரிசனம், மார்ச் 11 அன்று அவுரங்காபாத் குருஸ்ணேஸ்வரர் தரிசனம், மார்ச் 12 அன்று அவுங்நாக்நாத் அவுங்நாகநாதர் தரிசனம், மார்ச் 13 அன்று பார்லி வைத்தியநாதர் தரிசனம், மார்ச் 14 அன்று சிறீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி தரிசனம் முடித்து சுற்றுலா ரயில் மார்ச் 15 அன்று மதுரை வந்து சேருகிறது.

ரெயில் கட்டணம், உணவு, தங்குமிடம் உள்ளூர் பேருந்து கட்டணம் உள்பட பயணி ஒருவருக்கு ரூ.23,400 கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *