செய்திகள்

மழைநீர் சேகரிப்பு : சிறந்த முறையில் ஓவியம் வரைந்த மாணவியர்களுக்கு பரிசு

சென்னை, நவ. 9–

சென்னை வில்விவாக்கம் சிட்கோ நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர்களிடையே மழைநீர் சேகரிப்பு குறித்த ஓவியப் போட்டி நடைபெற்றது. இந்த ஓவியப் போட்டியில் மொத்தம் 125 மாணவியர்கள் பங்கேற்றனர். இவர்களில் சிறந்த முறையில் ஓவியம் வரைந்த 6 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான பரிசுகளை சென்னைக் குடிநீர் வாரிய அண்ணா நகர் பகுதி பொறியாளர் வி.ஜி. ராமசாமி வழங்கினார்.

6ம் வகுப்பு மாணவி எஸ். ஸ்ரீலேகா, 7–ம் வகுப்பு மாணவி ஐ. மரியா சின்ட்ரெல்லா மனிஷா ஆகியோருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

8ம் வகுப்பு மாணவிகள் கே. தனலஷ்மி, ஆர்.கே. ஹர்ஷனா ஆகியோருக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது.

6ம் வகுப்பு மாணவி சி.சில்வியா, 7–ம் வகுப்பு மாணவி எ.ரிஸ்வான பேகம் ஆகியோருக்கு மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *