சிறுகதை

மல்லி என்கிற மல்லிகா – திருச்சிற்றம்பலம் சுரேஷ்

காலிங் பெல் சிட்டுக்குருவி போல் சினுங்கியது.

உள்ளே இருந்து மல்லிகா வெளியே வந்தாள்.

‘வணக்கம் மேடம்’.

‘வணக்கம். என்ன வேண்டும்..மா?’

நாங்க..”கவிதா பல்சுவை” மாத இதழில் இருந்து வருகிறோம். இன்றைய சூழ்நிலையில்… பெண்கள் பல பிரச்சனைகளைத் திறம்பட சமாளித்து வருகிறார்கள். உங்க வாழ்க்கையில் அப்படி ஏதாவது சமாளித்து வந்துவுள்ளிர்களா… என்பதை அறிய விரும்புகின்றோம். அப்படி ஏதாவது நிகழ்ந்துள்ளதா?’

‘நிறைய இருக்கிறது’.

‘அப்ப.. சொல்லுங்க. மற்றவர்களுக்கு வழி காட்டியாகவும் அறிவுரையாகக் கூட மாறலாம்.

‘அப்பா இறந்த பின் அம்மா…! அண்ணன் வீட்டில் இருந்தார்கள். அப்பா அரசு ஊழியர். இதனால் அம்மாவுக்கு பென்ஷன் கிடைத்தது.

பென்ஷன் பணத்தை அண்ணன் தான் பயன்படுத்தி வந்தார். ஒரு கால கட்டத்தில் அண்ணி அம்மாவைப் கவனிக்கத் தவறினார்கள். இதனால் அம்மா உடம்பு மிகவும் பாதித்தது. இனி அண்ணன் வீட்டில் அம்மாவை விட மனசு இல்லை…! என் வீட்டிலும் என்னுடைய பெரிய அக்கா வீட்டிலும் மாறி மாறி வைத்து சமாளிக்க பழகிக் கொண்டோம். அம்மாவுக்கு கிடைத்த பென்ஷனை அம்மாவுக்குத் தெரியாமல் அண்ணன் எடுத்து விட்டது. பல ஆயிரம் ரூபாயை. இதனால் அம்மா மரணத்தில் கலந்து கொள்ள அண்ணனை தவிர்த்தோம். சில வருடங்களுக்கு பின் இது ஒரு கதை.

இன்னொரு…கதை ஒன்று உள்ளது’.

‘சொல்லுங்க..மேடம்’.

நம்முடைய குழந்தையைப் படிக்க வைப்பதில் தப்பு இல்லை. அதே நேரத்தில் அக் குழந்தையை அண்ணன் வீட்டிலோ அக்கா தங்கைவீட்டிலோ இருந்து படிக்க வைப்பது தவறு.

அது பல பிரச்சனைகளுக்கு வழி வகை செய்கிறது. நானும் ஒரு அக்கா மகளை என் மகளைப் போல் வளர்த்தேன். அவளை என் மகளோடு கல்லுரிக்கும் அனுப்பினேன்.

அவள் வேலை என்ன என்றால் “சாப்பிடுவாள்…படிப்பாள்…பின் தூங்குவாள். கொஞ்சம் கூட மாட வேலை செய்ய சொன்னாலும் செய்ய மாட்டாள். அதிகம் கேட்டாள் அவ அம்மாவிடம் கூறி சண்டை வளர்ப்பாள். உணவுக்குப் பணம் தருகிறேன் என்று கூறிய அக்காவும் சரியாக தரவில்லை. எப்படியோ சமாளித்து அவள் படிப்பை முடித்து அனுப்பினேன். அவளுக்கும் இப்ப திருமணம் ஆகிவிட்டது. எப்படி உள்ளீர்கள் என்று அவளும் கேட்டது இல்லை. அவ அம்மாவும் கேட்டது இல்லை.

இன்றைய கால கட்டத்தில் யார் வீட்டு குழந்தைகளும் யார் வீட்டிலும் இருந்து படிக்கச் செல்லக் கூடாது. ஆஸ்டலில் இருந்து படிக்க வைப்பது சிறப்பு. இல்லை என்றால் தனியாக ரூம் எடுத்து படிக்க வைக்கலாம்.

மிக உண்மையான வரிகள். நம்மை படிக்க வைக்கும் உறவுகளுக்கு கூட மாட உதவுவதில் பிள்ளைகள் சுனக்கம் காட்டக் கூடாது.

நம் வீட்டு குழந்தைகளை ஒரு வீட்டில் வளர்த்து படிக்க வைப்பது எப்படி தவறோ அதே போல் நமக்குப் பணம் கஸ்டம் வந்தால் உறவுகளிடம் பணம் வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அது பல சமயங்களில் உறவையே துண்டிக்க தூண்டுகிறது. என்னுடைய இன்னுறு அக்காவிடம் பணத்தால் பேசுவதை நிறுத்திக் கொண்டேன் அவர்களிடம் அவசரமாக வாங்கிய பணம் மூலம்’.

‘மேடம். உங்களுக்கு எத்தனை பிள்ளைகள். உங்களுிடம் … பாசம் எப்படி?’

‘ஒரு ஆண். ஒரு பெண். இருவரும்…மிகவும் பாசமாணவர்கள். இருவரும் என்னை மல்லி மல்லி என்றுதான் கூப்பிடுவார்கள்’.

சந்தோஷம். உங்களிடம் கண்ட சிறிய பேட்டி அடுத்த இதழில் கண்டிப்பா வரும். உங்களை நாடி பத்திரிக்கை வரும். ரொம்ப நன்றி மேடம் எங்களுக்கு உதவியதுற்கு’. அதற்கு என்னம்மா பத்திரம்மா போயிட்டு வாங்க’.

சில வாரங்களுக்குப் பின்

மல்லி என்கிற மல்லிகா பெயரில் இடம் பெற்ற கட்டுரையைப் படித்து மகிழ்ந்தாள் தபால் மூலம் பெற்று மல்லிகா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *