வாழ்வியல்

மலேரியாவை பரப்பும் காபி, சாக்லேட்

வளரும் நாடுகளில் அடர் காடுகள் அழிக்கப்படுவதற்கும் மலேரியா காய்ச்சல் பரவுவதற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக, ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது. ஆப்ரிக்கா போன்ற வளரும் நாடுகளில் காடுகளை அழித்து, அங்கு காபி, கோகோ, புகையிலை போன்ற பயிர்கள் வளர்க்கப்படுகின்றன.

இந்த பொருட்களுக்கு, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் கிராக்கி கூடி வருகிறது. காடுகளை அழிக்கும் நாடுகளில் மலேரியா பரவலாகி வருவதால் அந்நாடுகளிலிருந்து பயிர்களை இறக்குமதி செய்து பதப்படுத்தி, சாக்லேட், வறுத்த காபித் துாள் போன்ற விலையுயர்ந்த பொருட்களாக அதிக லாபத்திற்கு விற்கும் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என அந்த ஆய்வுக் கட்டுரை ஆலோசனை தருகிறது.

மேலும் அமெரிக்கா போன்ற ஆடம்பர நாடுகளில் உள்ள நுகர்வோர் மத்தியிலும் காடு அழிப்பு, மலேரியா பரவல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மலேரியா பரவலை கணிசமாக குறைக்க முடியும் எனவும் கட்டுரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *