சென்னை, மார்.1–
மரம் நடுங்கள்; அதனை நன்றாக பராமரித்து வளருங்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:–
“மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்!”
என்றார் கலைஞர். அவரது சொற்படி இந்த ஆண்டும் மரக்கன்று ஒன்றை நட்டுவைத்தேன். என் அன்புக் கட்டளையை ஏற்றுப் புத்தகங்களைப் பிறந்தநாள் பரிசாகக் கொண்டுவந்த உடன்பிறப்புகளுக்கு மஞ்சள்பையுடன் மரக்கன்றுகளை நன்றியாக வழங்கினேன்.
அவற்றை நட்டு, பராமரித்து வளர்ப்பீர் நாளை நலமாக!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.