செய்திகள்

மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா சிறப்பு வழிபாடு

சென்னை, ஜூலை.6-

சென்னை மயிலாப்பூரில் உள்ள அகில இந்திய சாய் சமாஜம் சார்பில் சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமாவையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் விரைவில் பூரண நலம் பெறவும், உலக மக்கள் நன்மைக்காகவும் நேற்று காலை 9 மணி முதல் வேத பாராயணம், குரு பூர்ணிமா வியாச பூஜை, சிறப்பு ருத்ராபிஷேகம், மகாதீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் தரிசிக்க ‘யூடியூப்’ மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு இருந்தது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை சமாஜம் தலைவர் கே.தங்கராஜ், செயலாளர் ஏ.செல்வராஜ், பொருளாளர் என்.உமாசங்கர்பாபு ஆகியோர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *