செய்திகள்

மதுரை சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

மதுரை, ஏப். 15–

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கொரோனா காரணமாக, திருக்கோவில் வளாகத்தில் பக்தர்கள் இல்லாமல் சித்திரை பெருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இன்று முதல் ஒவ்வொரு நாளும் எந்த நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதி தரப்படும் என்பது குறித்த விவரங்களை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

திருக்கல்யாணத்திற்கு அனுமதி

கோவிலுக்குள் செல்ல கிழக்கு, தெற்கு நுழைவாயில் வழியாக மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 24-ம் தேதி நடைபெறும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாண நிகழ்விற்கு, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருக்கல்யாணம் அன்று காலை 9:30 மணியிலிருந்து பிற்பகல் 2:30 மணி வரை மட்டுமே பக்தர்கள் சென்று கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருக்கல்யாண நிகழ்வை ஆன்லைன் நேரலை மூலம் பக்தர்கள் காணவும் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *