செய்திகள்

மதுரையில் கொரோனா வைரஸில் உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல்

Spread the love

மதுரை, மார்ச்.26–

மதுரை அண்ணா நகர் நெல்லை வீதியைச் சேர்ந்த 54 வயதுடைய அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா அறிகுறியுடன் அரசு ராஜாஜி மருத்துவமனை சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டார். அவர் ஏற்கனவே சிஓபிடி என்ற நுரையீரல் அடைப்பு நோய்க்கு மருந்து மாத்திரைகள் உட்கொண்டு வந்துள்ளார். மேலும் அவருக்கு ரத்தக் கொதிப்பு பிரச்சினையும் இருந்துள்ளது. இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை அவர் இறந்தார். கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீடு இருக்கும் நெல்லை வீதி முழுவதும் கிருமி நாசினி மருந்துகள்

தெளிக்கப்பட்டு நோய்த் தொற்று பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மதுரை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டனர். கொரோனா பாதிப்பில் இறந்தவர் வீடு அருகே உள்ள வீடுகள் மற்றும் இறந்தவர் ஜமா– அத்–தில் செயலர் பதவி வகித்ததால் அந்த ஜமாத்தை சேர்ந்த 34 நபர்களின் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு அதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இந்த 34 வீடுகளைச் சேர்ந்த 152 பேருக்கும் அவர்களது கையில் தனிமைப்படுத்தப்பட்டதற்கான ஸ்டாம்ப் அச்சு பதிக்கப்பட்டுள்ளது. இந்த 34 வீடுகளும் அமைந்துள்ள 9 வீதிகள் காவல் துறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இப்பகுதிகளில் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் வெளியே செல்வதற்கும் வெளிநபர்கள் இப்பகுதிக்கு வருவதற்கும் போலீசார் தடை விதித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *