செய்திகள்

மதுரையில் இருந்து திருப்பதிக்கு அடுத்த மாதம் முதல் நாள் தோறும் விமான சேவை

திருப்பதி, அக். 13–

மதுரை – திருப்பதிக்கு நவம்பர் 19 ந்தேதி முதல் தினமும் விமானம் இயக்கப்படும் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

மதுரை விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, பெங்களூர், மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு 20 விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து மதுரையில் இருந்து திருப்பதிக்கு விமான சேவை இயக்கப்பட வேண்டும் என திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

மாலை 4.20 மணிக்கு

இந்நிலையில், தற்போது முதல் முறையாக இண்டிகோ நிறுவனம், மதுரையில் இருந்து திருப்பதிக்கு விமானம் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த மாதம் (நவம்பர்)

19ஆம் தேதி முதல் மதுரையில் இருந்து திருப்பதிக்கு நாள்தோறும் விமானம் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக மதுரையிலிருந்து திருப்பதிக்கு விமான சேவை வழங்குவது இண்டிகோ நிறுவனம் தான்.

இந்த விமானம் மதியம் 3 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சரியாக 4:20 மணிக்கு திருப்பதியை சென்றடையும். அதைத் தொடர்ந்து 4:40 க்கு திருப்பதியில் இருந்து புறப்பட்டு மாலை 6:40 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *