செய்திகள்

மக்களவை உறுப்பினராக விஜய் வசந்த் பதவி ஏற்பு

டெல்லி, ஜூலை 19–

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக விஜய் வசந்த்திற்கு சபாநாயகர் ஓம் பிர்லா இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்து போது, காமராஜரின் புகழ் வாழ்க, ராஜுவ் காந்தி வாழ்க என குறிப்பிட்டு பதவி ஏற்றுக் கொண்டார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெற்ற எச்.வசந்தகுமார் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தார். பின்னர், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலுடன் கன்னியாகுமரி தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட பொன். ராதாகிருஷ்ணன் தோல்வியை தழுவினார். இந்நிலையில் இன்று காலை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக விஜய் வசந்த்திற்கு சபாநாயகர் ஓம் பிர்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

விஜய் வசந்த் தமிழில் பதவியேற்று கொண்டார். பதவியேற்ற பின் பெருந்தலைவர் காமராஜரின் புகழ் வாழ்க, ராஜுவ் காந்தி வாழ்க என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *