செய்திகள்

பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்

போலீசுக்கு மர்ம நபர்கள் கடிதம்

பொள்ளாச்சி, செப். 29–

பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என்று காவல் நிலையத்திற்கு மர்ம நபர்கள் கடிதம் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சியில் உள்ள மேற்கு காவல் நிலைய ஆய்வாளருக்கு மர்ம நபர்கள் அஞ்சல் அட்டையில் கடிதம் ஒரு மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர்.

போலீஸ் எதிரியல்ல

அந்த கடிதத்தில், பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் அல்லது கையெறி குண்டு வீசப்படும். காவல்துறை எங்களுக்கு எதிரி அல்ல; சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த வேண்டும். எஸ்டிபிஐ குமரன் நகர் மற்றும் பிஎப்ஐ குமரன் நகர் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

காவல் நிலையத்திற்கு வந்த இந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கடிதத்தை அனுப்பிய மர்ம நபர்கள் யார் என குறித்தும் குறிப்பாக தற்போதுள்ள சூழ்நிலையை வேறு யாரும் தவறுதலாக பயன்படுத்தி திசை திருப்பும் நோக்கில் செய்துள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *