செய்திகள்

பேருந்துகள், மெட்ரோ ரெயில்களில் நாளை முதல் 50% பயணிகள் மட்டுமே அனுமதி

சென்னை, மே 5–

சென்னை மாநகர பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் நாளை முதல் 50 சதவிகித இருக்கைகளில் மட்டுமே பயணிகள் பயணம் செய்திட அனுமதி .

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, மே 6–ந்தேதி முதல் மே 20-ந்தேதி வரை புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் பயணிகள் ரெயில், மெட்ரோ ரெயில், பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், நாளை முதல் மாநகர் போக்குவரத்தக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில், 50 சதவிகித இருக்கைகளில் மட்டுமே பயணிகள் பயணம் செய்திட அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பயணிகள் உரிய முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியினைப் பின்பற்றி பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் தெறிவித்துள்ளது.

மெட்ரோ ரெயில்களிலும் நாளை முதல் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பயணிகள் குறிக்கப்பட்டுள்ள எக்ஸ் குறியீடு இருக்கைகளை தவிர்த்து இடைவெளியுடன் அமர்ந்து பயணிக்க வேண்டும் என்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *