செய்திகள்

பெரம்பூர் ஐ.சி.எப் வளாக ரெயில்வே அருங்காட்சியகம்: கோடையில் கூடுதல் பார்வையாளர் பார்க்க ஏற்பாடு

சென்னை, ஏப். 21–
கோடையில் கூடுதல் பார்வையாளர் வருவதால், சிறப்பு வசதிகளை ஐ.சி.எப். வளாகத்தில் உள்ள ரெயில்வே அருங்காட்சியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் பெரம்பூரில் உள்ள சென்னை ரெயில் கண்காட்சியில் மக்களின் வருகை வழக்கத்தைவிட 30% அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெரம்பூரில் உள்ள இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எப்) வளாகத்தில் சென்னை ரெயில் அருங்காட்சியகம் என்ற பெயரில் நிரந்தரமான கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. 166 ஆண்டு பாரம்பரியமிக்க இந்திய ரெயில்வேயின் பரிணாம வளர்ச்சியைப் படம் பிடித்துக் காட்டும் வகையில் மொத்தம் 12 ஏக்கரில் இது அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை 2002ல் அப்போதைய மத்திய ரெயில்வே அமைச்சர் நிதிஷ் குமார் திறந்து வைத்தார்.
1895ன் நீராவி ரெயில் என்ஜின் முதல் இந்திய ரெயில்வேத் துறையில் தற்போதுள்ள ரெயில்கள் மற்றும் ரெயில் பெட்டிகளின் மாதிரிகளை இங்கு காணலாம். சிக்னல்களின் செயல்பாடுகள், ரெயிலை இயக்கும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மாதிரி காட்சியும் இங்கு உள்ளன. பாரம்பரிய ரெயில்களின் புகைப்படங்கள் மற்றும் ரெயில்பெட்டி மாதிரி’ கொண்ட சிறப்பு காட்சிக் கூடமும் பொழுதுபோக்கு அம்சங்கள், உணவகங்கள் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் கோடை விடுமுறையில் சென்னையில் பார்க்க வேண்டிய முக்கியமான இடமாக இது மாறியுள்ளது. இதனால் வழக்கத்தைவிட பார்வையாளர்களின் எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *