போஸ்டர் செய்தி

பெங்களூர் சிறையில் அதிரடி சோதனை: 37 பட்டா கத்திகள், செல்போன், போதை பொருட்கள் பறிமுதல்

Spread the love

பெங்களூர், அக். 10–

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடத்தப்பட்ட சோதனையில் 37 பட்டா கத்திகள், போதைப் பொருட்கள், செல்போன்கள், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தாராளமாக கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் வழங்கப்படுவதாகவும், கைதிகள் செல்போனில் வெளியில் உள்ளவர்களோடு சரளமாக பேசுவதாகவும் பெங்களூரு மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு உதவி கமி‌ஷனர் சந்தீப் பாட்டீல் தலைமையில் போலீசார் இன்று சிறைக்கு சென்று கைதிகளின் அறைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையில் 37 பட்டாக்கத்திகள், போதை பொருட்கள், செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதிகளுக்கு இந்த பொருட்களை சப்ளை செய்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *