சென்னை, மார்ச். 20–
இந்தியாவின் முன்னணி ஏர் கண்டிஷனிங் தயாரிப்பு நிறுவனமான புளூ ஸ்டார் புதியகுறைந்த விலை ‘ஸ்ப்ளிட்’ ஏர் கண்டிஷனர்களை அறிமுகப்படுத்தி உள்ளது என்று நிர்வாக இயக்குனர் பி.தியாகராஜன் தெரிவித்தார்.
புளூ ஸ்டார் ஏர் கண்டிஷனர்கள், சிறந்த முறையில் குளிரூட்டும் வசதி, உலகத்தரம், நம்பகத்தன்மை, நீடித்து உழைக்கும் தன்மை ஆகியவற்றுக்காக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவை என்று நிர்வாக இயக்குனர் பி.தியாகராஜன் தெரிவித்தார்.புளூ ஸ்டார் 3 -ஸ்டார், 4- ஸ்டார், 5 -ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்ப்ளிட் ஏசி அறிமுகம் செய்துள்ளது. 3- ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்ப்ளிட் ஏசியின் விலை ரூ. 25 ஆயிரத்து 990 ஆகும்.
இந்த புது வகை சாதனங்கள், வாடிக்கையாளர்களுக்கு இணக்கமான அம்சங் களையும் வரையறைகளையும் கொண்டுள்ளன. அவையாவன : ஆற்றல் சேமிப்புக்கு – எக்கோ மோட், ஐடியுஎஸ் & ஓடியுஎஸ் நீடித்து உழைப்பதற்காக – புளூ பின் பூச்சு, கம்போர்ட் ஸ்லீப் என்கிற சிறப்பம்சம், இரவு நேரங்களில் ஏசி வெப்பநிலையை தானாகவே சரிசெய்யும். படுத்திருப்பவர்களுக்கு சுகமான உறக்கத்தைக் கொடுப்பதுடன் மின்சாரத்தையும் மிச்சப்படுத்தும். செல்ப்–-டையக்சிஸ் என்பது ஏசி சாதனம் ஏதேனும் கோளாறுகளுக்கு ஆளானால் ட்ரபிள் ஷுட்டிங் செய்து பாதுகாக்கும். இவை தவிர, பிசிபிஎஸ்க்கு கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த ஏசிக்கள் ஒரு உலோக உறை (மெட்டல் என்கிளோசர்) உள்ளது.
ஸ்டெபிளைசர் தேவையில்லை
புளூ ஸ்டார் இன்வெர்ட்டர் ஏசி சாதனங்களின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் –- வெவ்வேறு வோல்ட்டேஜ் நிலையில் இயங்கும் என்பதால், வெளியே தனியாக வோல்ட்டேஜ் ஸ்டெப்ளைசர் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால், ஸ்டெப்ளைசர் செலவு மிச்சம் ஆவதுடன் பொருத்திக் கொள்வதற்கான இடம் போதுமானதாக இருக்கும்.
இந்தியா வெப்ப மண்டலத்தில் அமைந்துள்ளதால் அதிக அளவில் வெப்பம் இருக்கும் காலங்கள் அதிகம். மாநகரங்களில் மரங்கள் இல்லாத நிலையில், தட்ப வெப்ப நிலை அதிகரித்து காணப்படும். ஒரு குளுகுளு சாதனம், 35°C அளவில் சம சீதோஷ்ண நிலையைக் கொடுக்கும். ப்ளூ ஸ்டார் சாதனங்கள், 35°C – என்பதை மிஞ்சும் அளவுக்கு 100% சம சீதோஷ்ண நிலையை விரைவாக, செயல்திறன் மிக்கதாக, வெயில் உச்சத்தில் இருக்கும் கோடை காலங்களிலும் வழங்கிடும்.
இந்த முழு இன்வெர்ட்டர் ரகங்களில் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான கியாஸ் பயன்படுத்தப்படுகிறது.
வரவிருக்கும் கோடை காலத்திற்கு புளூ ஸ்டார் நிறுவனத்தின் ரூம் ஏசி சாதனங்களுக்கான விளம்பரத் தூதுவராக விராட் கோலி இருப்பார்.
நீட்டிக்கப்பட்ட வாரண்ட்டிகள் மற்றும் நிதி
அனைத்து புளூ ஸ்டார் ஏசிகளுக்கும் முதல் ஆண்டுக்கு உறுதியாக முழுமையான வாரண்ட்டிகள் உண்டு. மேலும், இன்வெர்ட்டர் ஸ்ப்ளிட் ஏசி சாதனங்களின் கம்ப்ரசர்களுக்கு 9 ஆண்டு காலத்திற்கு கூடுதல் வாரண்ட்டி. கம்பரசருக்கு ஆக மொத்தம் 10 ஆண்டுகள் வாரண்ட்டி. மேலும், நிறுவனமானது, இன்வெர்ட்டர் ஏசி சாதனத்தின் IDUs & ODUs ல் உள்ள PCB க்கு கூடுதல் வாரண்ட்டி அளிக்கிறது. அனைத்து கூடுதல் வாரண்ட்டிகளும் பொருத்தும் தேதியிலிருந்து முதல் ஆண்டு முடிந்த பின்னர் பெற முடியும்.