செய்திகள்

புனேவிலிருந்து ராமையன்பட்டிக்கு வந்த 12 பேர்

புனேவிலிருந்து ராமையன்பட்டிக்கு வந்த 12 பேர்:

28 நாட்கள் தனிமையில் எச்சரிக்கை

சின்னாளபட்டி, ஏப்.8–

திண்டுக்கல் ஒன்றியம் குரும்பபட்டி ஊராட்சி ராமையன்பட்டிக்கு புனேயிலிருந்து வந்த 12 பேருக்கு 28 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராமையன்பட்டியைச் சேர்ந்தவர்கள் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் சாலையோரம் ஜூஸ் கடைகள் வைத்து பிழைப்பு நடத்தி வந்தனர். தற்போது அப்பகுதியில் கோரோனோ வைரஸ் பரவி வருவதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் உணவின்றி மிகவும் சிரமப்பட்டனர். பின்னர் லாரிகள் மூலம் வந்தவர்கள் ராமையன்பட்டி கிராமத்தில் இருப்பதாகதகவல் கிடைத்தது. மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி ராமையன்பட்டி கிராமத்தில் ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், குரும்பபட்டி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துலட்சுமி, ஊராட்சி பொறுப்பு செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் ராமையன்பட்டி கிராமத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மகாராஷ்டிரா மாநிலம் புனேயிலிருந்து 10 பேரும் புனே அருகில் உள்ள கிராமத்திலிருந்து இரண்டு சிறுவர்களும் ராமையன்பட்டிக்கு வந்திருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 28 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்றும் வீட்டை விட்டு வெளியே வந்து நடமாடினாள் காவல்துறை மூலம் தண்டிக்கப்படுவார் என்று எச்சரிக்கை செய்யப்பட்டது. அவர்கள் தங்களுக்கு அரிசி மற்றும் மளிகை சாமான்கள் வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததை அடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் ஊராட்சி நிர்வாகம் மூலம் வழங்க ஏற்பாடு செய்தார் மேலும் இவர்களில் யாராவது வெளியே நடமாடினால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கிராம மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *