செய்திகள்

புதுவையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தது

Spread the love

புதுவை,ஏப். 27 –

புதுவையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தது.

புதுவை மாநில அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுவையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து கண்காணிப்பு பணியாளர்கள் 2 லட்சத்து 89 ஆயிரத்து 340 வீடுகளில் சோதனை நடத்தி அங்கு வாழும் 11 லட்சத்து 50 ஆயிரத்து 265 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று கண்டறிந்தனர்.

புதுவை, காரைக்கால் , மாகே, ஏனாம் பகுதிகளில் 1987 பேருக்கு ரத்தமாதிரிகள் எடுத்து சோதனை நடத்தியதில் 1983 பேருக்கு கொரோனா இல்லை என்று கண்டறியப்பட்டது . மேலும் 4 பேரின் பரிசோதனை முடிவு மட்டும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதுவையில் கடந்த 33 நாட்களாக சுகாதாரப் பணியாளர்கள் நன்றாகப் பணியாற்றிவருகிறார்கள். இதனால்தான் தொற்று பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. இதற்காக புதுவை சுகாதாரப் பணியாளர்களின் சிறந்த சேவைக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ் வர்த்தன் வீடியோ காலில் தொடர்புகொண்டு பேசி பாராட்டு தெரிவித்தார்.

புதுவை மாநில அரசுக்கும் அமைச்சர் ஹர்ஸ் வர்த்தன் பாராட்டு தெரிவித்தார் என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.

புதுவை இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 பேரில் ஒருவர் குணமடைந்து இன்று வீடு திரும்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *