செய்திகள்

புதுவையில் இன்று 471 பேருக்கு கொரோனா தொற்று

புதுவை , செப்.20 –

புதுவையில் இன்று புதிதாக 471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 345 பேர் புதுவையிலும் 101 பேர் காரைக்காலிலும் 16 பேர் ஏனாமிலும் 9 பேர் மாகேயிலும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 10 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். 347 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 4909 ஆக உயர்ந்தது. இவர்களில் 1471 பேர் புதுவையிலும் 110 பேர் காரைக்காலிலும் 216 பேர் ஏனாமிலும் 35 பேர் மாகேயிலும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3077 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவரவர் வீடுகளில் தங்கிச் சிகிச்சை பெறுகிறார்கள்.

இதுவரை தொற்று பாதித்து அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டவர்கள் மொத்தம் – 22 923 பேர். அவர்களில் 458 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். குணமடைந்து வீடுதிரும்பியவர்கள் – 17 556 பேர் ஆவார்கள். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *