போஸ்டர் செய்தி

புதுடெல்லியில் உள்ள தேசிய போலீஸ் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா அஞ்சலி

Spread the love

புதுடெல்லி, ஜூன். 2–
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று டெல்லியில் உள்ள தேசிய போலீஸ் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார்.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடந்த 1959-ம் நடைபெற்ற மோதலில் 10 போலீசார் கொல்லப்பட்டனர். அவர்களையும், சுதந்திரத்துக்கு பின்னர் நாடு முழுவதும் கடமையை செய்தபோது வீரமரணம் அடைந்த சுமார் 35 ஆயிரம் போலீசாருக்காக டெல்லி சானக்பூரி பகுதியில் மிக பிரமாண்டமான நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. 6.12 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தேசிய போலீஸ் நினைவிடம் மற்றும் சீருடை பணியாளர் அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திறந்து வைத்தார்.
இந்நிலையில் தேசிய போலீஸ் நினைவிடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன், உள்துறை உயர் அதிகாரிகள் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் உயர் அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *