செய்திகள்

புதுச்சேரி மகளிர் அணி முன்னாள் செயலாளர் மரணம்: எடப்பாடி, ஓ.பி.எஸ். இரங்கல்

சென்னை, ஜூலை 3–

அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–

புதுச்சேரி மாநில மகளிர் அணி முன்னாள் செயலாளர் பி.கே.கலைச்செல்வி உடல்நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம்.

புரட்சித் தலைவி அம்மா மீதும், கழ­கத்தின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டிருந்த அன்புச் சகோதரி கலைச்செல்வியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *