செய்திகள்

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் 1500 பேருக்கு தலா 10 கிலோ அரிசி

ராஜபாளையத்தில்

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் 1500 பேருக்கு தலா 10 கிலோ அரிசி

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்

 

ராஜபாளையம், மே.6–

பால் உற்பத்தியாளர்கள், முகவர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் என 1500 நபர்களுக்கு ராஜபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பாக தலா 10 கிலோ அரிசியை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசுகையில்:-

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன் காரணமாகத்தான் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வந்த ஒருவர் மூலம் திருத்தங்கல்லில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அந்தப் பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்து சமூக விலகளை கடைப்பிடித்தால் கொரோனா வைரஸை தடுக்க முடியும்.. கொரோனா வைரஸினால் இறப்பு என்பதை இல்லாத மாவட்டமாக விருதுநகர் மாவட்டம் திகழ்கின்றது. மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் தங்களால் இயன்ற அளவிற்கு பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். தமிழக முதலமைச்சர் எடப்பாடியார் உத்தரவுக்கு இணங்க விதிமுறைகளுக்கு உட்பட்டு நாளை முதல் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் கொரோனா தடுப்பு பணியில் நகராட்சி ஆணையாளர்கள், யூனியன் ஆணையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அனைத்து அரசுப் பணியாளர்களும் கடுமையாக பணியாற்றி வருகின்றனர். இதில் ஒரு சில குறைகள் இருக்கத்தான் செய்யும். குறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அரசு அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தற்காலிகமாக பணியாற்றும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்குவது குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து பேசிநடவடிக்கை எடுக்கப்படும். ஒப்பந்த பணியாளர்கள் படிப்படியாக நிரந்தர பணியாளராக ஆக்க நடவடிக்கை எடுக்கப்படும். இன்றைக்கு ராஜபாளையம் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக பால் முகவர்கள். பால் உற்பத்தியாளர்கள் பணியாளர்கள் என 1500 நபர்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கியுள்ளோம். இது போன்ற பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக உள்ளனர் .தமிழக அரசின் துரித நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

நிகழ்ச்சியில் ராஜபாளையம் பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மேளாளர் முருகேசன், சங்கத் தலைவர் வனராஜ், அதிமுக நகர செயலாளர் பாஸ்கரன், நகர அம்மா பேரவை செயலாளர் வக்கீல் முருகேசன், அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் குருசாமி, முன்னாள் ராஜபாளையம் நகர் மன்ற தலைவர் செல்வ சுப்பிரமணிராஜா, மதுரை ஏர்போர்ட் அத்தாரிட்டி கமிட்டி உறுப்பினர் எஸ்.எஸ்.கதிரவன், மாவட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணராஜா, அவைத் தலைவர் எஸ்.பரமசிவம், கூட்டுறவு சங்க துணை தலைவர் கந்தகிருஷ்ணகுமார் உட்பட அதிமுக நிர்வாகிகள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *