செய்திகள்

‘‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் ஏரு உள்ள காலம் வரை எடப்பாடி பேரு நிலைக்கும்’’ ஜெயலலிதா பேரவை நன்றி தெரிவித்து தீர்மானம்

சென்னை, பிப்.12–

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததன் மூலம், ஏரு உள்ள காலம் வரை எடப்பாடி பேரு நிலைக்கும் என்று ஜெயலலிதா பேரவை நன்றி தெரிவித்துள்ளது.

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து மீத்தேன், ஈத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட விளைநிலைங்களை பாதிக்கும் எத்தகைய திட்டங்களையும் அனுமதிக்க முடியாது என்பதை கொள்கை பிரகடனமாக அறிவித்திருக்கும் உழவினம் காத்த உழவர், உலக தமிழினம் போற்றும் முதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடியாருக்கு ஜெயலலிதா பேரவை உளமார்ந்த பாராட்டையும், நெஞ்சம் நெகிழ்ந்த நன்றியையும் தொிவித்து கொள்கிறது.

கோதாவரி, கிருஷ்ணா, காவிரி இணைப்பு, வைகை குண்டாறு ஒன்றாகி ஓடும் சிறப்பு அத்திகடவு அவினாசி திட்டம் என்றெல்லாம் ஏரோட்டும் உழவினத்திற்கு நீரோட்டம் பெருக்கி வெள்ளந்தி சனங்களின் விழி நீர் துடைத்த வேந்தனாக நெடுவாசல் மக்களுக்கு நிம்மதி தந்த நிகரில்லா முதல்வராக நெகிழி என்னும் அரக்கனுக்கு முடிவு கட்டிய சுற்றுச்சூழல் காவலனாக முக்கடல் சூழ்ந்த பாரதத்திற்கே வழிகாட்டும் முன்னோடி மாநிலம் எனும் தலைபாகை சூட்டிய தமிழனாக அருந்தொண்டாற்றிவரும் தமிழக முதலமைச்சரை கழக அம்மா பேரவை உள்ளார்ந்த பெருமிதத்தோடு உளமாற நன்றியினை தெரிவித்து கொள்கிறது.

உழவர்கள் எதிர்க்கும் திட்டத்தை ஏற்கமாட்டோம்

உழவர்கள் எதிர்க்கும் எந்த திட்டத்தையும் உறுதியாக ஏற்கமாட்டோம் என்ற புரட்சித்தலைவி அம்மாவின் சூளுரைக்கு தலைவணக்கம் செய்ததற்கு முதலமைச்சர் எடப்பாடியார் உழவராக பிறந்து உழைப்பால் முதல்வராக உயர்ந்த சாமானிய சரித்திரம். காவிரி படுகை விவசாயத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருக்கும் கழக அரசின் கொள்கை பிரகடனம் என்பது அந்த பொன்னேட்டு சரித்திரத்தில் மின்னுகிற முத்தாக பதிக்கப்படும். ஏரு உள்ள காலம் வரை எடப்படாடியாரின் பெயர் நிலைக்கும் என்பது சத்தியம்.

தமிழகத்தின் அரை நூற்றாண்டு கால தாவாக்களுக்கு தமது அயரா உழைப்பால் தீர்வுகளை தந்து பொற்கால தமிழகத்தை செதுக்கிக்கொண்டிருக்கும் எளிமை சாமானியன் எடப்படாடியாரின் நல்லாட்சியே 2021–லும் தொடர்ந்திட முதல்வர் எடப்பாடியார் அரும்பெரும் சாதனைகளே வழித்தடம் அமைத்து வருகிறது என்பதனை பெருமிதத்தோடு கழக அம்மா பேரவை எடப்பாடியாரின் பொற்பாதம் பணிந்து வணங்கி கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *