செய்திகள்

பழனி முருகன் கோயிலில் நம்ம பழனி செல்பி ஸ்பாட்

பழனி, பிப். 12–

பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ச்சி அடையும் வகையில் கோவில் நிர்வாகம் 2 இடங்களில் நம்ம பழனி செல்பி ஸ்பார்ட் அமைத்துள்ளார்கள். தண்டபாணி நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் தலா 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் நம்ம பழனி என்ற வாசகத்துடன் கூடிய செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செல்பி ஸ்பாட்கள் பக்தர்களின் பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார். இதில் துணை ஆணையர் செந்தில்குமார், செயற்பொறியாளர் வெங்கடேசன், பிஆர்ஓ கருப்பண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *