சிறுகதை

பள்ளிக்குப் போவோமா? | ஆர்.எஸ்.மனோகரன்

அந்த அரசு பள்ளி மைதானத்தில் நிறைய பெற்றோரும் அவர்களுக்கு வழிகாட்ட சில மாணவர்களும் குழுமியிருந்தனர்.

பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரின் ஆலோசனை கேட்கப்பட்டது. விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்து கையெழுத்தும் பெறப்பட்டது.

வெளியே வரும் பெற்றோரிடம் பத்திரிக்கையாளர்கள் பேட்டி எடுத்தனர்.

‘பள்ளிகள் திறப்பு குறித்து உள்ளே என்ன சொல்லியிருக்கிறீர்கள்’ ? பதில்கள் பத்திரிக்கையாளர்களை மலைக்க வைத்தன.

என் பையன் கட்டட வேலைக்கு போறான்; சுளையாக தினமும் 500 ரூபாய் கொண்டு வர்றான்; அதை விட்டுட்டு பள்ளிக்கு போனா எப்படி? எப்படியும் ஆல் பாஸ் போடத்தான் போறாங்க; இன்னும் ஆறு மாசம் கழிச்சு தான் பள்ளிகளை தொறக்கட்டுமே!.

ஒரு மாணவனின் அம்மா, என் பையன் ஊர் சுத்திக்கிட்டு எல்லா கெட்ட பழக்கத்தையும் கத்துகிட்டு வர்றான்; அதுக்கு பள்ளிக்குப் போறது நல்லது தானே! கொரோனா வந்தால் பரவாயில்லை; பள்ளிகளை திறங்க! என்றார்.

இன்னொரு மாணவனின் அப்பா, பள்ளிக் கூடத்தை ஆறு மாசத்துக்கு திறக்கக் கூடாதுன்னு சொல்லணும்னு என்னை மிரட்டி கூட்டிட்டு வந்து இருக்கான்,என் பையன் என்றார்.

எல்லா பெற்றோரிடமும் இருந்து இதே ஸ்டைலில் பதில்கள் வர ஹெட் மாஸ்டருக்கு மயக்கம் வந்தது.

ஆசிரியர்கள் பலரும் அப்பாடா, ஒரு ஏழு மாசமா இந்த பக்கிகளிடமிருந்து விடுதலையாகி நிம்மதியாக நிர்வாக வேலைகளை மட்டும் பார்த்துக்கிட்டு வந்து போய்க் கொண்டிருக்கிறோம். இதுவே இன்னும் 6 மாசம் நீடித்தால் நல்லா இருக்கும்; நாங்க ரிட்டயர் ஆகி போய்விடுவோம் என்றனர்.

காம்பவுண்டு சுவரில் வரிசையாக அமர்ந்திருந்த கொரோனாக்கள் இந்தப் பசங்கள படிக்க விட்டால் எவனாவது பெரிய விஞ்ஞானி ஆகி எங்களோட அடுத்த தலைமுறைக்கு வேட்டு வைப்பாங்க;அதனால, பள்ளிகளை திறக்க விடமாட்டோம் என முணுமுணுத்தன.

என்னத்தச் சொல்ல ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *