சென்னை, ஜூலை 9–
இன்று முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர் பனகல் அரசரின் பிறந்தநாள். இதையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:–
‘இந்து சமய அறநிலையத் துறை, இடஒதுக்கீடு போன்றவற்றுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்த சட்டங்களைக் கொண்டு வந்து திராவிட வரலாற்றில் துருவ நட்சத்திரமாக விளங்கும் பனகல் அரசரின் பிறந்தநாள் இன்று.
அவரது சாதனைகளைப் பயின்று உரமூட்டிக் கொள்வோம். திராவிடச் சமத்துவம் நிலைபெறத் தொடர்ந்து வெல்வோம்’.
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.