வாழ்வியல்

பதிவுத் துறையின் பணிகள் என்ன?–2

இந்தியாவிலேயே சரிபார்ப்பு என்ற புதிய முறையை, தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இவ்வாறு சரிபார்த்தபின் ஆவணம் பதிவு செய்யும் நாள் மற்றும் சரியான நேரத்தை முன்பே இணையவழி பதிவு செய்து அந்த நாளில் ஆவணப்பதிவு பதிவை மேற்கொள்ளலாம். குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் உடனுக்குடன் அனுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

தற்போது இணையம் வழி பட்டா மாறுதல் வசதி கிராமப்புறங்களுக்கு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. விரைவில் நத்தம் மற்றும் நகர புலன்களுக்கு விரிவுபடுத்தப்படும். புதிய இந்த இணையவழி பதிவு வசதியால் வில்லங்கச் சான்று மற்றும் சான்றொப்பமிட்ட ஆவண நகல் பெற சார்பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டியது இல்லை.

அதைவிட பெரிய சிறப்பு என்னவென்றால் ஆள் மாறாட்டம் தடுக்கப்படும். பதிவின் போது மோசடி பத்திரப்பதிவுகளை தடுக்கும் வகையில் மென்பொருள் உருவாக்கப்பட்டு சொத்தின் உரிமையாளரை கைரேகையை ஒப்பீடு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது போராட்டங்கள் பெருமளவில் தவிர்க்கப்படும்.

இணைய வழியில் கட்டணங்களை செலுத்தும் முறை மென்பொருளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு தற்போதுள்ள ஆறு வங்கிகளுடன் மேலும் ஐந்து வகைகளை சேர்த்து அரசு விரிவுபடுத்தியுள்ளது. 11 தேசிய வங்கிகள் மூலம் தற்போது அனைத்து கட்டணங்களையும் செலுத்தலாம். எந்த ஊரிலும் இந்த பதினோரு வங்கிகளில் சில வங்கிகள் அது கட்டாயம் இருக்கும்.

கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 102 5174 சேவை மையம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதன் மூலம் பொது மக்கள் சேவைகள் குறித்த விவரங்களையும், ஆலோசனை களையும் பெற முடியும்.

இதை எதிர்ப்பவர்கள் லஞ்ச ஊழல் அதிகாரிகளும் அவர்களது புரோக்கர்களும் தான். ஏழை எளிய மக்களை வாட்டி வதைத்த விற்பனையாளர்களும், கொள்ளையடித்த/ கொள்ளைகளுக்கு உறுதுணையாக இருந்த பத்திர எழுத்தர்களும்தான். இருந்த காலத்தில் 25% லாபம் வைத்து பெற்றவர்கள் உண்டு. இன்னும் ரூபாய் 70 க்கு பத்திர பத்திரத்தை ரூபாய் 30 க்கு விற்கின்றனர் இந்தப் பத்திரம் விற்கும் நடைமுறை ஒழிய வேண்டும்.

அதேநேரத்தில், தற்போதுள்ள பட்டா மாற்ற நடைமுறையை மாற்றி ,பட்டா மாற்றத்திற்கு பத்திர அலுவலகங்களில் கட்டணம் வாங்கி அலைச்சல் இன்றி பட்டா மாற்றம் செய்யும் முறை தமிழ் நாடு முழுவதும் கொண்டுவரப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *