வாழ்வியல்

பட்டுப்புழு வளர்க்க மல்பெரித் தோட்டங்களை வைத்துள்ள விவசாயிகளே ஊடுபயிர் அவசியம்

தமிழ்நாட்டில் வளர்ப்புத் தொழில், கிராமப்புற படித்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு சுய வேலைவாய்ப்பு வழங்கி வரும் பயனுள்ள விவசாயம் சார்ந்த தொழில் ஆகும். அத்தகைய புதிதாக நடவு செய்த மல்பெரிj; தோட்டம் 3 முதல் 5 மாத வளர்ச்சி பாதிப்படைந்து மல்பெரி இலைகளின் தரம் மற்றும் இலை உற்பத்தி திறன் ஆகியவற்றில் பாதிப்பு உண்டாக்கிவிடும். இதனால் புதிய விவசாயிகள் சுயவேலை வாய்ப்பு தொடங்க உள்ள படித்த இளைஞர்களுக்கு இரண்டு அல்லது மூன்று முறை களையெடுத்து தோட்டத்தினை பராமரித்திட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு அதற்கென தனியே ரூ. 20,000/– முதல் 25,000/– வரை கூலி செலவு மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். கலைகளைக் குறைந்திட களைக் கொல்லிகளை பயன்படுத்தும்போது மண்வளம் பாதிப்படையும். அதனால் புதியதாக நடவு செய்யப்பட்ட மல்பெரி நாற்றுளும் பாதிப்படைந்து விடும். எனவே, இதனை தடுத்திட மண்வளம் பாதுகாத்திட, திறந்த வெளியாக உள்ள புதிய காலப்குட்டை பயிர்களை ஊடுபயிராக வளர்த்திடலாம். குறைந்தளவு நீரில் அதிக மகசூல் தரக் கூடியதும் அறுவடைக்குப்பின், பசுந்தாள் உரமாக மண்ணில் மடித்திட தழைகள் அதிகம் கொண்ட பயிர்களை ஊடுபயிராக பயிரிடலாம். பயிறுவகை, பயிர்களான உளுந்து, கொண்டைக்கடலை, தட்டைப்பயிறு, பூசணி, தக்கைப்பூண்டு, பாசிப்பருப்பு, வெள்ளரி, சுரை, சணப்பை ஆகிய பயிர்களை பயிர் செய்வதன் மூலம் களைகளைக் கட்டுப்படுத்துவதோடு களை எடுக்கும் செலவையும் குறைக்கலாம்.

குறைந்த காலத்தில் நிறைவாக கிடைக்கச் செய்யலாம். நீர் ஆவியாவதை தடுத்து மண்ணின் ஈரப்பதத்தை நிலைநிறுத்தலாம். வளி மண்டலத்தில் உள்ள தழைச் சத்தை மண்ணில் நிலை நிறுத்தலாம். தீமையுண்டாக்கும் பூச்சிகளை அழிக்க நன்மை செய்யும் பூச்சிகளின் பெருக்கத்தை ஊக்குவிக்கலாம். நுண்ணுயிர் பெருக்கத்தினை ஊக்குவிக்கலாம். மழைக்காலங்களில் மண் அரிப்பை தடுக்கலாம். எனவே புதியதாக மல்பெரி நடவு செய்யும் புதிய பட்டு விவசாயிகள் ஊடுபயிர்கள் வளர்ந்து களைகளைக் கட்டுப்படுத்திட மேற்கொள்ளும் செலவினத்தை குறைத்து ஊடுபயிர்கள் மூலம் உபரி வருமானம் பெற்று பயனடையலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *