செய்திகள்

நீதிமன்றக் காவலை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார் ப.சிதம்பரம்

Spread the love

புதுடெல்லி, செப். 12–

நீதிமன்றக் காவல் தொடர்பாக விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை ப.சிதம்பரம் திரும்ப பெற்றார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், விசாரணைக்குப் பிறகு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வரும் 19-ம் தேதி வரை அவர் காவலில் வைக்கப்படுவார்.

இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். இதேபோல் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்தும் தனியாக ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த இரு மனுக்களும் இன்று விசாரணைக்கு வந்த போது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடுகையில், தனது பதவியை ப.சிதம்பரம் தவறாக பயன்படுத்தியதற்கு வலுவான ஆதாரம் உள்ளது. அவர் மோசடியில் ஈடுபட்டார் என்பதால் தான் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை எனக் கூறினார்.

சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் குற்றச்சாட்டு இல்லை எனக்கூறினார்.

இதனை தொடர்ந்து முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்ட நாளில் ஏன் ஐகோர்ட்டை நாடவில்லை என கேள்வி எழுப்பி, சிதம்பரம் ஜாமீன் மனு மீது 7 நாட்களுக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை இம்மாதம் 23–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதற்கிடையே செப்டம்பர் 19-ம்தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை ப.சிதம்பரம் திரும்ப பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *