செய்திகள்

நீதிபதிகள் 65 வயதில் ஓய்வு பெறுவது மிகக் குறைவானது: தலைமை நீதிபதி

டெல்லி, ஏப். 12–

நீதிபதிகள் 65 வயதில் ஓய்வு பெறுவது, மிக குறைவான வயது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த ஒரு ஆண்டு காலமாக பணியாற்றி வருபவர் நீதிபதி என்.வி.ரமணா. இவர் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் 65 வயதில் நீதிபதிகள் ஓய்வு பெறுவது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

இது குறித்து பேசி உள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, அமெரிக்க நாட்டில் நீதிபதியாக இருப்பவர்கள் அந்நாட்டு அரசியல் சாசனப்படி, உயிரோடு இருக்கும் வரை பதவியில் இருக்கலாம். ஆனால் நம் நாட்டில் 65 வயதில் ஓய்வு பெறுவது என்பது மிக குறைவான வயதாக உள்ளது என நீதிபதி ரமணா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.