செய்திகள்

‘நீட்’ தேர்வு எழுதும் நேரம் 3 மணி 20 நிமிடமாக நீட்டிப்பு : தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

டெல்லி, ஏப்.7–

‘நீட்’ தேர்வு எழுதும் நேரத்தை, 3 மணி 20 நிமிடமாக நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இளங்கலை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வு இதுவரை மூன்று மணி நேரம் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 20 நிமிடங்கள் அதிகரித்து 3 மணி நேரம் 20 நிமிடங்கள் என அதிகரித்திருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

200 கேள்வி–200 நிமிடம்

மருத்தவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படுவதால், கேள்வி ஒன்றுக்கு ஒரு நிமிடம் என்ற வகையில் 200 நிமிடங்கள் என அதிகரிக்கப்பட்டதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

நடப்பாண்டு முதல் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் ‘நீட்’ தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ‘நீட்’ தேர்வு இந்த ஆண்டு ஜூலை 17ஆம் தேதி நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.