வாழ்வியல்

நாள்பட்ட புண்கள் சீக்கிரம் ஆற உதவும் பீர்க்கை இலைகள்

பீர்க்கங்காய் சமைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல்வேறு நோய்களும் விரைவில் குணமாகும்.

பீர்க்கை இலைகளை அரைத்து, சொறி, சிரங்கு நாள்பட்ட புண்களில் பற்று போட்டால் சீக்கிரம் குணமாகும்.

பீர்க்கங்காயை எப்படிப் பார்த்து வாங்குவது?

அடர் பச்சை நிறத்தில் இறுக்கமான தோல் கொண்ட காயாக இருக்குமாறு பார்த்து பீர்க்கங்காய் வாங்க வேண்டும். காம்புப் பகுதியும் பசுமையாக இருக்க வேண்டும். கனமானதாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். தோல்களில் வெடிப்போ, நிறமாற்றமோ இருந்தால் வாங்கக் கூடாது.

பீர்க்கை இலைகளை அரைத்து, சொறி, சிரங்கு நாள்பட்ட

புண்களில் பற்று போட்டால் சீக்கிரமே குணமாகும்

எப்படி பத்திரப்படுத்துவது?

பீர்க்கங்காய் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த ஒரு காய் என்பதால் உடனுக்குடன் சமைத்து விடுவது சிறந்தது. அதிகபட்சம் 3 நாட்களுக்குள் உபயோகித்துவிட வேண்டும்.

எப்படியெல்லாம் சமைக்கலாம்?

கூட்டாக, பொரியலாக, மசாலாவாக, துவையலாக எப்படி வேண்டுமானாலும் சமைக்கலாம். சாம்பாரில் சேர்க்கலாம். பீர்க்கங்காயின் தோல்கூட மருத்துவ குணம் வாயந்தது என்பதால் அதையும் துவையலாக அரைக்கலாம். பீர்க்கங்காயை வில்லைகளாக வெட்டி, பஜ்ஜி செய்யலாம். வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை வதக்கி, அத்துடன் பீர்க்கங்காய் துண்டுகளும் சேர்த்து வதக்கி, உப்பு, காரம் சேர்த்து, தொக்காக செய்து சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுக்குத் தொட்டுக் கொள்ளலாம்.

பீர்க்கங்காயின் பிற பயன்கள்

பீர்க்கங்காயைக் காய வைத்து உள்ளே இருக்கும் நார்ப் பகுதியைப் பதப்படுத்தி, உடம்பு தேய்த்துக் குளிக்கும் நார் செய்யப்படுகிறது. பீர்க்கை நார் சருமத்தை சுத்தப்படுத்தவும், இறந்த செல்களை நீக்கி, ஆரோக்கியமாக வைக்கவும் கூடியது. பீர்க்கை இலைகளை அரைத்து, சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்களில் பற்று போட்டால் அவை சீக்கிரமே குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *