வாழ்வியல்

நரை முடி வராமல் இருக்க என்ன சாப்பிட வேண்டும்?

தலைமுடியை எவ்வாறு பராமரித்துக் கொள்ள வேண்டும்? அதிகம் வெள்ளை முடி வருவதற்கு காரணம் என்ன? போன்ற கேள்விகளுக்கு பதில் அறிய தொடர்ந்து படியுங்கள்.

வாழ்வியல் மாற்றங்களும் முடியை நரைக்க வைக்கும். நரைத்த முடி என்பது நீங்கள் போதிய ஊட்டச்சத்து உள்ள உணவை உட்கொள்ளவில்லை என்பதன் அறிகுறி.

விட்டமின் பி காம்ப்ளெக்ஸ் இல்லாத உணவுகளை உண்ணுதல், மரபணு என நரை முடி உண்டாகப் பல காரணங்கள் உண்டு.

முடி ஸ்ட்ரெயிட்டனிங் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தும் ரசாயனங்கள், மட்டமான, தரமில்லாத ஷாம்பு, அதிக அளவில் பொடுகு ஆகியவையும் நரைத்த முடி வரக் காரணமாகும்.

பி காம்ளெக்ஸ் மற்றும் அனைத்து வகையான ஊட்டச்சத்து அடங்கிய உணவு, தேங்காய் எண்ணெய் தேய்த்து பராமரிப்பு செய்தல் ஆகியவை நரை முடி வருவதைத் தடுக்கும்.

இரும்புச் சத்துள்ள பேரிச்சை போன்ற பழங்கள், மீன், கீரைகள் முடி நன்கு வளர உதவும்.

அதைப்போலவே பால், முட்டை, பயிறு உள்ளிட்ட புரதம் மிகுந்த உணவும் மிக மிக அவசியம். விட்டமின் நிறைந்த உணவுகள் முடிக்கு நன்மை தரும்.

எண்ணெய் தேய்ப்பதற்கும் முடி உதிர்வது நிற்கும் என்பதற்கும் நேரடித் தொடர்பு கிடையாது. ஆனால் முடியைப் பராமரிக்க தேங்காய் எண்ணெய் தேய்ப்பது அவசியம். அது முடி உதிர்வைத் தடுக்கும்.

விற்பனை செய்யப்படும் ஏதோ ஒரு கிரீம், ஆயில் ஆகியவற்றை தடவுவதால் முடி உதிர்வது, நரைப்பது தடுக்கப்படும் என்பது ஓரளவே உண்மை.

பல ஊட்டம் மிகுந்த உணவுகளே முடிக்கு மிகவும் அவசியம்.

Leave a Reply

Your email address will not be published.