செய்திகள்

நங்கநல்லூரில் தேசிய கைவினைப் பொருட்கள், கைத்தறி ஆடைகள் கண்காட்சி: தள்ளுபடி விற்பனை

Spread the love

சென்னை, ஜூன்.1-

நங்கநல்லூரில், தேசிய கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி துவங்கப்பட்டுள்ளது. இதில் தேசிய அளவிலான நெசவாளர்கள், கைவினைஞர்கள் இணைந்து, தங்கள் உற்பத்தியை சந்தைப்படுத்தும் வகையில் கண்காட்சியை பல்வேறு மாநிலங்களில் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நங்கநல்லூர் 4வது பிரதான சாலையில் உள்ள திரிசக்தி சமுதாய கூடத்தில் இக்கண்காட்சியை துவக்கியுள்ளது.

இதில் பல மாநில கைத்தறி சேலைகள், ராஜஸ்தான் காக்ரா சோலி, ஜெய்ப்பூர் பேன்சி சேலைகள், காதி குர்தா, பைஜாமா, போர்வை, திரைச்சீலை ஆகியவை வரும் பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன.

கைவினைப் பொருட்கள் வரிசையில் ஜெய்ப்பூர் காலனி, லாக் வளையல், பஞ்சலோக நகை, ஓவியம், மரப் பொருட்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. அனைத்து கைத்தறி கைவினைப் பொருட்களுக்கும் 10 முதல் 20% வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இம்மாதம் 7ந் தேதி வரை இக்கண்காட்சி நடைபெறும். இக்கண்காட்சியை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9.30 மணி வரை பார்வையிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *