வாழ்வியல்

தொண்டை வலி, ஆஸ்துமா நோய்களுக்கு அரு மருந்தாகும் இஞ்சி

தோலைச் சீவி எறிந்து விட்டு இஞ்சியை வெறுவாயில் தின்றாலும் துண்டு துண்டாக்கி, சாறாக்கி எந்த ரூபத்தில் உட்கொண்டாலும் அது சகல நோய்களையும் நீக்கும் சக்தியுள்ள உணவாகும்.

நம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகிறது.

இஞ்சிக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகம் உண்டு. மேலும் குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும். கல்லீரலை சுத்தப்படுத்துகிறது.

மலச்சிக்கல், வயிற்று வலி ஏற்பட்டால் இஞ்சிச் சாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும்.

பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி சேர்த்து துவையல் அறைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.

ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கசாயம் போட்டுக் குடித்தால் குணமாகும். தொண்டை வலி, ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு இஞ்சி அரு மருந்தாகும்.

பித்தம் அதிகமாகி தலை சுற்றல், விரக்தி ஏற்படுவதுண்டு. சுக்குத் தூளை தேனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும். (இஞ்சித் தோலை சுத்தம் செய்து சுண்ணாம்பு நீரில் ஊறவைத்து அதனைக் காய வைத்தால் சுக்கு கிடைக்கும்).

இவ்வாறு மருத்துவ மகத்துவம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில், சட்னி, பொங்கல், பொரியலில் சேர்த்து பயன் பெறலாம். அப்படி செய்வதன் மூலம் உணவே மருந்தாகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *