வர்த்தகம்

தெளிவான படம், துல்லியமான ஒலியுடன் டோஷிபா ஸ்மார்ட் டி.வி.: ஆன்லைன் நிறுவனங்களில் விற்பனை

சென்னை, செப். 16–

கடந்த 68 ஆண்டுகளாக, ஜப்பான் தொழில்நுட்ப தரத்தின் அடையாளமாக விளங்கி வரும் டோஷிபா நிறுவனம், சர்வதேச அளவில் தொலைக்காட்சி விற்பனைவில் பல புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது இந்தியாவில் உள்ள அமேசான்ப்ளிப்கார்ட்ரிலையன்ஸ் டிஜிட்டல்டாட்டா க்ளிக் ஆகிய ஆன்லைன் தளங்களில் நவீன ரக டிஜிட்டல் வசதியுடன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்த உள்ளது. அறிமுக தள்ளுபடியாக முதல் 4 நாட்களுக்கு 18ந் தேதி முதல் 21ந் தேதி வரை) இதில் ஏற்கனவே டிவி வாங்கும் அனைவருக்கும் 4 ஆண்டுக்கால இந்த டி.வி. பேனல் வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் டிசைன் செய்யப்பட்டு, இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வர இருக்கும் டோஷிபா 4கே டிவி மாடல்கள், தரமான படம், ஒலி, டிசைன் கொண்டு இந்த டிவிக்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. நியாயாமன விலையிலும் விற்பனைக்கு வருகிறது என்று தலைமை ஒருங்கினைப்பு அதிகாரி ரிஷி டாண்டன் தெரிவித்தார்.

இந்த டி.வியில் உள் பொருத்தப்பட்டுள்ள அலெக்‌ஸா, ஸ்கிரீன் மிர்ரரிங் ஆகியவை கூடுதல் சிறப்பு. கூடவே யூ ட்யூப், நெட்ப்ளிக்ஸ், பிரைம் வீடியோ போன்ற தளங்களும் இதில் ஏற்கனவே உள்ளன. விரைவில், வேறு சில ஒடிடி தளங்களும் இணைக்கப்பட உள்ளன என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *