செய்திகள்

‘‘தெரு ஓரம் உட்கார்ந்து குடிப்பதை தடுங்கள் : ‘‘அரசுக்கு சர்வதேச ஒயின்’’ கூட்டமைப்பு தலைவர் கோரிக்கை

Spread the love

சென்னை, ஜன. 25–

சாலைகளில் அமர்ந்து, கார்களில் உட்கார்ந்து பொறுப்பற்ற முறையில் உள்ள குடிப்பழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று சர்வதேச ஒயின், ஸ்பிரிட் இந்திய கூட்டமைப்பு தலைவர் அம்ரித் கிரண் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் தரமான மற்றும் சிறந்த மதுபானங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவும், சட்ட விரோத மதுபானங்களுக்கு எதிராகவும், விலை குறித்த விகிதக் கொள்கைகளில் வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் தன்மையுடனும் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

இந்திய தேசிய ஹோட்டல்கள் கூட்டமைப்பும், சர்வதேச ஒயின்கள் மற்றும் ஸ்பிரிட்களின் இந்திய கூட்டமைப்பும் இணைந்து பொறுப்புள்ள குடிப் பழக்கத்தைக் கொண்டு வர வாடிக்கையாளர்களை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தில் உறுப்பினர்களில் இந்தியப் பிரதிநிதியாக எங்களது கூட்டமைப்பு உள்ளது. சுகாதார நிறுவனத்தில் அடிக்கடி நடத்தப்படும் விவாதங்களின்போது தீங்கு விளைவிக்கும் மதுபானங்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பதுடன், குறைவாக குடிப்போம், நல்லதை குடிப்போம் என்ற அம்சம் முன்வைக்கப் படுகிறது.சென்னையில் வீடுகளுக்கு வெளியே மட்டும் 48 சதவீத வாடிக்கையாளர்கள் மது அருந்துகின்றனர். அவர்களில் 44 சதவீதம் பேர் கார்கள், கார் நிறுத்துமிடங்களில் மது அருந்துகிறார்கள். 10 சதவீதம் பேர் தெரு வோரத்தில் மற்றும் பொது இடங்களிலேயே அருந்துகின்றனர்.

மது அருந்துவதற்கும், உணவு சாப்பிடவும் சட்டப்பூர்வமான அதிகளவு இடங்களை ஒதுக்கித் தர வேண்டுமென மது அருந்துவோர் ஆய்வில் கருத்துத் தெரிவித்துள்ளனர். அண்டை மாநிலங்களில் இருந்து மதுபானங்களை சட்டவிரோதமான முறையில் கடத்தி வருவது முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

பார்கள் மற்றும் உணவு அருந்தும் கூடங்களில் மதுஅருந்துவதற்கான வசதிகளை உருவாக்க உரிமம் பெற வேண்டியுள்ளது. இதில் சற்று தளர்வுகளைக் கடைப்பிடித்து மது அருந்துவதற்கான வசதிகளை உருவாக்க வேண்டும். இதன்மூலம், கார்களிலும், கார் நிறுத்தும் இடங்களிலும் மது அருந்துவது தவிர்க்கப்படும் இவ்வாறு கூட்டமைப்பு தலைவர் அம்ரித் கிரண் சிங் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *