செய்திகள்

தென்றல் காற்றில் கொரோனா விரைவாக பரவும் அபாயம் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி, அக்.14-

தென்றல் காற்றில் கொரோனா விரைவாக பரவும் அபாயம் உள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா தொற்று தோன்றிய நாள் முதல் இன்று வரை நுண்கிருமியை பற்றி அறிந்துக்கொள்ள பல கட்டங்களில் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மும்பை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆராய்ச்சி நடத்தி உள்ளனர். இதில் தொற்று பாதிப்புடைய ஒருவர் வீட்டை விட்டு வெளியுலகுக்கு வந்து, இருமுகிற போது அதே திசையில் மெல்லிய தென்றல் காற்று சில்லென்று வீசினால் அது கொரோனா தொற்றை விரைவாக பரப்பும் என கண்டறிந்துள்ளனர்.

இதுபற்றி ஆராய்ச்சியாளர் அமித் அகர்வால் கூறும்போது, “எங்கள் ஆய்வு முடிவுகள் அடிப்படையில், வீட்டுக்கு வெளியே வந்து விட்டாலே முக கவசங்கள் அணிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக சில்லென்று காற்று வீசுகிற சூழலில் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்” என தெரிவித்தார். மேலும் முழங்கையில் இருமுவதும் அல்லது முகத்தை திருப்பிக்கொண்டு இருமுவதும் வெளியே கொரோனா பரவுகிற வாய்ப்பைக் குறைக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *