செய்திகள்

தீபாவளி–மகாவீர் ஜெயந்தி நாளில் இறைச்சி கடைகளுக்கு அனுமதி

சென்னை, அக். 31–

தீபாவளி அன்று தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இறைச்சிக் கடைகளை திறக்க அரசு அனுமதித்துள்ளது.

தீபாவளி திருநாளன்று பண்டிகை பலகாரங்களுடன் சிக்கன், மட்டன் உணவுகளைச் சமைத்து ருசிப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தீபாவளி நாளன்று மகாவீரர் ஜெயந்தி வருவதால் இறைச்சிக் கடைகளைத் திறக்கக் கூடாது என்று சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள் அறிவித்தன.

இதன் காரணமாக, பொதுமக்கள் மட்டுமின்றி, தீபாவளி நாளன்று இறைச்சிக் கடைகள் மூடப்படுவதால் வருமானம் பாதிக்கும் என்று கடை உரிமையாளர்களும் கவலை தெரிவித்தனர். இந்தச்சூழலில் தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில்,

இறைச்சிக் கடைகள் திறப்பு

ஒவ்வொரு ஆண்டும் மகாவீரர் ஜெயந்தி நாளன்று இறைச்சிக் கடைகள் மூடப் படக்கூடிய நடைமுறை தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வரும் சூழலில், பொதுமக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து வந்த கோரிக்கைகளைப் பரிசீலித்தும் தீபாவளி நாளன்று தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இறைச்சிக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

அதேவேளையில் ஜெயின் மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளிலுள்ள இறைச்சிக் கடைகளும், ஜெயின் மத வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியுள்ள இறைச்சிக் கடைகளும் மூடப்படும்” என்று அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *