போஸ்டர் செய்தி

தி.மு.க. கூட்டணி கட்­சிகள் போட்­டி­யி­டும் தொகு­திகள் அறி­விப்­பு

சென்னை, மார்.15–

தி.மு.க. கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளைப் பிரிப்பதில் கடும் இழுபறிக்கு பின்­னர் யார் யாருக்கு எந்­தெந்த தொகுதிகள் என்­று இன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தி.மு.க. கூட்டணியில் மற்ற கட்சிகள் தங்களது தொகுதிகளை இறுதிப்படுத்தி விட்டன. ஆனால் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 9 இடங்களில் போட்டியிட காங்கிரஸ் ஒப்பந்தம் செய்தது. இதில் இழுபறி நீடித்தது. இறுதியாக 9 தொகுதிகளை காங்கிரஸ் பட்டியலிட்டுக் கொடுக்க அதற்கு தி.மு.க. ஓரளவு சம்மதம் தெரிவித்தது. தாங்கள் கொடுத்துள்ள 9 தொகுதிகளுக்கான பட்டியலை டெல்லி மேலிடத்திற்கு காங்கிரஸ் அனுப்பி வைத்துள்ளதாகவும் அங்கு அதற்கு ஒப்புதல் பெறப்பட்டு நேற்று இறுதியாக முடிவு ஏற்பட்டது.

அதன்படி தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில், கூட்டணி தலைவர்கள் முன்னிலையில் இன்று முறைப்படி அறிவித்தார்.

அதன் விவரம் வருமாறு:-

தி.மு.க. போட்டியிடும் தொகுதிகள்

1. தென்சென்னை

2. மத்திய சென்னை

3. வடசென்னை

4. ஸ்ரீ பெரும்புதூர்

5. காஞ்சிபுரம் ( தனி)

6. அரக்கோணம்

7. வேலூர்

8. திருவண்ணாமலை

9. சேலம்

10. கடலூர்

11. தர்மபுரி

12. திண்டுக்கல்

13. கள்ளக்குறிச்சி

14. மயிலாடுதுறை

15. நீலகிரி

16. பொள்ளாச்சி

17. தென்காசி

18. தஞ்சாவூர்

19. தூத்துக்குடி

20. நெல்லை

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்

1. திருவள்ளூர்

2. ஆரணி

3. திருச்சி

4. கரூர்

5. சிவகங்கை

6. கிருஷ்ணகிரி

7. விருதுநகர்

8. தேனி

9. கன்னியாகுமரி

10. புதுச்சேரி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடுகிறது.

மார்க்சிஸ்ட் கட்சி மதுரை மற்றும் கோவையில் போட்டியிடுகிறது

கம்யூனிஸ்ட் கட்சி நாகை மற்றும் திருப்பூரில் போட்டியிடுகிறது.

ம.தி.மு.க. ஈரோடு தொகுதியிலும்,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ராமநாதபுரம் தொகுதியிலும்,

இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும்,

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி நாமக்கல் தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

17–ந் தேதி வேட்­பா­ளர்­கள்

தி.மு.க. சார்பில் 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் 17–ந்தேதி வெளியிடப்படும். பார்லிமெண்ட் தேர்தலுக்கு தனி தேர்தல் அறிக்கையும், 18 தொகுதி சட்டமன்ற தேர்தலுக்கு தனி தேர்தல் அறிக்கையும் தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் வெளியிடப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *