செய்திகள்

தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? அமைச்சர் பாண்டியராஜன் கேள்வி

துப்பாக்கியால் சுட்ட

தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?

அமைச்சர் பாண்டியராஜன் கேள்வி

சென்னை, ஜூலை 14–

துப்பாக்கியால் சுட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு ஸ்டாலின் இதுவரை கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று அமைச்சர் பாண்டியராஜன் கேட்டார்.சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட கொடுங்கையூர் 37 வது வட்டம் இராஜரத்தினம் நகர் பகுதியில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் 500 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணமாக தலா 5 கிலோ அரிசி தொகுப்புடன் 5 வகையான காய்கறிகள் அடங்கிய அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் க.பாண்டியராஜன், வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், ஆகியோர் வழங்கினர்.

இதனைத்தொடந்து அமைச்சர் பாண்டியராஜன் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது,

முதலமைச்சரின் பெறும் முயற்சியால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரத்தை தடுத்து இன்று 85 சதவீதம் பேர் குணமடைந்து நல்ல முறையில் வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் வைரஸ் காய்ச்சல் கண்டறிய 22 ஆயிரம் முன்களப்பணியாளர்களின் தீவிர உழைப்பால் நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.தண்டையார்பேட்டை மண்டலத்தில் இன்று 6012 பேர் நோய் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர் மீதம் உள்ள 1331 பேர் விரைவில் குணமாகி வீடு திரும்ப உள்ளனர்

கொரோனா தொற்றை குணப்படுத்த ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம் ஆகிய இரண்டும் அரசுக்கு இரு கண்கள் போன்றது மக்கள் சித்த ஓமியோபதி மருத்துவத்தை 100 சதவீதம் ஏற்றுக்கொண்டுள்ளனர். கொரோனாவுக்கு தமிழக பாரம்பரிய வைத்திய முறையான சித்த மருத்துவ சிகிச்சை இன்று உலக அளவில் பேசப்பட்டு வருகிறது.

ஸ்டாலின் மவுனம் ஏன்?

தி.மு.க.வினர் தற்போது துப்பாக்கி கலாச்சாரத்தில் ஈடுபட்டு வருவது மிகவும் கவலையடைய செய்துள்ளது.

தமிழக அரசின் கொரோனா பணிகளில் பொய் குற்றங்களை கூறும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஏன் அவரது கட்சி நிர்வாகிகளுக்கு கண்டனம் தெரிவிக்காமல் தற்போது வரை மவுனம் காத்து வருகிறார் என்பது புரியவில்லை. துப்பாக்கி வன்முறையை ஊக்குவிப்பதையே இது காட்டுவதாக தெரிகிறது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ஜெ.கே.ரமேஷ், வியாசை எம் இளங்கோவன், பசும்பொன் பாஞ்ச்பீர், ஆர்.நித்தியானந்தம், ஜெஸ்டின் பிரேம்குமார், எஸ்.சுயம்பு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *