செய்திகள்

திருவள்ளூர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கே.பி. முனுசாமி எம்.பி., அமைச்சர் பா.பென்ஜமின், மாவட்டச் செயலாளர் பி.வி. ரமணா வழங்கினர்

திருவள்ளூர் ஜன. 19–

திருவள்ளூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் ஆயிரம் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி எம்.பி., அமைச்சர் பா.பென்ஜமின், மாவட்டச் செயலாளர் பி.வி. ரமணா ஆகியோர் வழங்கினர்எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் அம்மா திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பிவி.ரமணா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கழக துணை ஒருங்கிணைப்பாளரும் மண்டல பொறுப்பாளருமான கே.பி.முனுசாமி எம்.பி. மற்றும் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், ஊரகத் தொழில் துறை அமைச்சருமான பா.பென்ஜமின், திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி வி.ரமணா ஆகியோர் 1000 ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினர்.

துணை ஒருங்கிணைப்பாளரும், மண்டல பொறுப்பாளருமான கே.பி. முனுசாமி எம்.பி. பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய இந்தப் பேரியக்கம் அவர் மறைந்தபோது அம்மா தலைமை ஏற்ற பொழுது 16 ஆயிரம் தொண்டர்கள் இருந்தனர். அம்மாவின் சீரான தலைமையில் இன்று ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு மேல் இருக்கின்றோம். அம்மா வழியில் வளர்ந்த இரண்டு சகோதரர்கள் இந்த பேரியக்கத்தை ஆலமரம் போல் அனைவரையும் அரவணைத்து ஏழை எளிய மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளையும் அம்மாவின் வழியில் செய்து வருகிறார்கள்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் தந்தவர், நகரத்தில் குழாய் மூலம் தண்ணீர் பிடித்து வந்த நிலையில் கிராம மக்களுக்கும் நீர்த் தேக்க தொட்டி அமைத்து குழாய் மூலம் தண்ணீர் கொடுத்தவர். நகரத்திலிருந்து கிராமத்திற்கும், கிராமத்திலிருந்து நகரத்திற்கும் குறைந்த கட்டணத்தில் பேருந்தை இயக்கியவர் புரட்சித் தலைவர். நகரத்தில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் குக்கிராமத்தில் ஏழை எளிய மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று சிந்தித்து செயல்பட்டவர் எம்ஜிஆர்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்திற்கு பூண்டி ஒன்றிய கழக செயலாளர் கந்தசாமி, கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சுதாகர், திருவலங்காடு ஒன்றிய செயலாளர் சக்திவேல், பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளர் சீனிவாசன், திருத்தணி நகர செயலாளர் சௌந்தரராஜன், பொதட்டூர்பேட்டை பேரூர் கழக செயலாளர் ரவிச்சந்திரன், கடம்பத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் சுஜாதா சுதாகர், பூண்டி ஒன்றிய குழு பெருந்தலைவர் வெங்கட்ரமணா, திருவாலங்காடு ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜீவா விஜயராகவன், திருத்தணி ஒன்றிய குழு தலைவர் தங்கதனம், பள்ளிப்பட்டு ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜான்சிராணி, ஆர்.கே பேட்டை ஒன்றிய குழு பெருந்தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரக் கழக அவைத் தலைவர் சந்திரன், நகரக் கழக இணைச் செயலாளர் விஜய தேவி பாபு, நகர துணை செயலாளர் லட்சுமி சுரேஷ், நகர துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், நகர பொருளாளர் சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி மஞ்சுளா ஏழுமலை, மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேசன், பத்மநாபன், நகர இளைஞரணி செயலாளர் வேல்முருகன், நகர இலக்கிய அணி செயலாளர் எத்திராஜ், நகர அம்மா பேரவை செயலாளர் லோகநாதன், நகர மகளிர் அணி செயலாளர் கஸ்தூரி, நகர பாசறை செயலாளர் ஜெயவீரன், நகர தொழில்நுட்ப பிரிவு பிரிவு செயலாளர் ராஜ்குமார், நகர பேரவை செயலாளர் வெங்கடேசன், நகர அண்ணா தொழிற்சங்க செயலாளர் செல்வம், நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் மஹாபூபாஷா ஆகியோர் வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் திருத்தணி கோ.ஹரி, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் பிஎம் நரசிம்மன் எம்எல்ஏ , மாநில பேரவை இணைச் செயலாளர் செவ்வை சம்பத்குமார், மாவட்ட பால்வளத்துறை தலைவர் சந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் ரமேஷ் குமார், மாநில அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் சம்பத்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்குபாய் தேவராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.சண்முகம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருண் சுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நடராஜன், மாவட்டக் கழக இணைச் செயலாளர் விஜயலட்சுமி ராமமூர்த்தி, மாவட்ட கழக துணைச் செயலாளர் கமாண்டோ பாஸ்கரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் ராம்குமார், மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் கைவண்டுர் எத்திராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் உதயகுமார், மாவட்ட பாசறை செயலாளர் நரேஷ், குமார் மாவட்ட தொழில் நுட்ப பிரிவு செயலாளர் கஜேந்திரன், திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில் தக்கார் ஜெய்சங்கர், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் சீதாராமன், எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் ,நகர அம்மா பேரவை தலைவர் ஜோதி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சிற்றம் ஜெ.சீனிவாசன், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் எழிலரசன், மாவட்ட இளைஞரணி தலைவர் நேசன், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் ஞானகுமார், திருவள்ளூர் நகர பொருளாளர் ஜி சீனிவாசன் பூந்தமல்லி மேற்கு ஒன்றிய செயலாளர் இரா.மணிமாறன், பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜி.கெளதமன், நகர கழக செயலாளர் ஜி.கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *